/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திபேடு இணைப்பு சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
/
அத்திபேடு இணைப்பு சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
அத்திபேடு இணைப்பு சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
அத்திபேடு இணைப்பு சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
ADDED : நவ 12, 2025 10:09 PM

பொன்னேரி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்தடன் பயணிக்கின்றனர்.
பொன்னேரி அடுத்த அத்திபேடு - ஜனப்பத்திரம் இடையே, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை உள்ளது. இச்சாலை முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
ஜல்லிக் கற்கள் மீது கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. மழை பெய்தால், பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. பொன்னேரி, தச்சூர் பகுதிகளில் இருந்து, பெரியபாளையம் செல்வோர், இந்த இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சாலை பள்ளங்கள் மற்றும் சிதறி கிடக்கும் ஜல்லிக் கற்களில் சிக்கி, வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து சிரமத்திற்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் நிலை தடுமாறி விழுந்து, சிறு சிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
மேலும், புழுதி பறப்பதால், இணைப்பு சாலையோரங்களில் வசிக்கும் குடியிருப்பு மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சேதமடைந்த இணைப்பு சாலையை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

