/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தினமலர் செய்தி எதிரொலி மகளிர் சுகாதார வளாகம் வர்ணம் பூச்சு
/
தினமலர் செய்தி எதிரொலி மகளிர் சுகாதார வளாகம் வர்ணம் பூச்சு
தினமலர் செய்தி எதிரொலி மகளிர் சுகாதார வளாகம் வர்ணம் பூச்சு
தினமலர் செய்தி எதிரொலி மகளிர் சுகாதார வளாகம் வர்ணம் பூச்சு
ADDED : பிப் 03, 2025 02:14 AM

கடம்பத்துார்கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இலுப்பூர் ஊராட்சி.
இங்கிருந்து பாப்பரம்பாக்கம் செல்லும் சாலையில் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
அதன் பின் அந்த கட்டடம் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் 53 ஆயிரம் ரூபாய் மதி்பபீட்டில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், கட்டடம் சேதமடைந்து கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
பயன்பாடில்லாத இந்த மகளிர் சுகாதார வளாகம் அரசியல் கட்சியினர் விளம்பர மையமாக மாற்றப்பட்டுள்ளதாக நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் மகளிர் சுகாதார வளாகத்தை வர்ணம் பூசும் பணி மேற்கொண்டனர். மேலும் இந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென இப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.