/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'தினமலர்' செய்தி எதிரொலி சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு
/
'தினமலர்' செய்தி எதிரொலி சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு
'தினமலர்' செய்தி எதிரொலி சேதமான குடிநீர் குழாய் சீரமைப்பு
ADDED : நவ 08, 2024 01:43 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சி, முருகப்பநகர் பகுதியில் பலிஜா கல்யாண மண்டபம் எதிரில் சாலையோரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக வெளியேறி தார்ச்சாலையில் ஆறாக ஓடியது. இதனால் சாலை குண்டும், குழியுமாக மாறியது.
இச்சாலை வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள், கார் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடைந்த குழாய்களை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.