/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மாற்றுத்திறனாளி, முதியோர் ஏமாற்றம் 'தாயுமானவர்' பட்டியலில் சேர்க்க விடுபட்டோர் வலியுறுத்தல்
/
ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மாற்றுத்திறனாளி, முதியோர் ஏமாற்றம் 'தாயுமானவர்' பட்டியலில் சேர்க்க விடுபட்டோர் வலியுறுத்தல்
ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மாற்றுத்திறனாளி, முதியோர் ஏமாற்றம் 'தாயுமானவர்' பட்டியலில் சேர்க்க விடுபட்டோர் வலியுறுத்தல்
ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மாற்றுத்திறனாளி, முதியோர் ஏமாற்றம் 'தாயுமானவர்' பட்டியலில் சேர்க்க விடுபட்டோர் வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2025 03:41 AM
திருவள்ளூர்: தாயுமானவர் திட்டத்தின் கீழ், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் பட்டியலில், 70 வயதை கடந்தோரின் பெயர் விடுபட்டுள்ளது.
இதனால், ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தவர்கள், தங்கள் பெயரை சேர்க்க, மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது வட்டங்களில், 1,108 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அந்தியோதனா அன்ன யோஜனா - 50,255, முன்னுரிமை குடும்ப அட்டை - 2,61,539 மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை - 3,35,416 என, மொத்தம் 6,47,210 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
பெயர் இல்லை தமிழகத்தில் நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கும், 'தாயுமானவர்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அத்தியாவசிய பொருட்களை, ரேஷன் கடை பணியாளர்கள் வீடு தேடிச் சென்று வழங்குவர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், வில்லிவாக்கம் தவிர 12 ஒன்றியங்களில், 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ், 48,763 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, கடந்த ஆக., மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 70 வயதைக் கடந்த பலருக்கும், ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரித்தால், பட்டியலில் பெயர் இல்லை என்கின்றனர்.
இணைக்க வேண்டும் எனவே, மாவட்ட ரேஷன் பொருள் வழங்கல் துறையினர், விடுபட்ட 70 வயதிற்கு மேற்பட்டோரின் விபரங்களை, தாயுமானவர் திட்டத்தில் இணைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தாயுமானவர் திட்ட பயனாளிகள் விபரம் ஒன்றியம் மொத்த பயனாளிகள் எல்லாபுரம் 3,442 கும்மிடிப்பூண்டி 4,737 கடம்பத்துார் 4,079 மீஞ்சூர் 5,950 பள்ளிப்பட்டு 3,276 பூந்தமல்லி 5,878 பூண்டி 3,197 ஆர்.கே.பேட்டை 3,268 சோழவரம் 3,582 திருத்தணி 2,972 திருவாலங்காடு 2,519 திருவள்ளூர் 5,863 மொத்தம் 48,763

