/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு கன்னங்காரணியில் அபாயம் ஊராட்சி நிர்வாகம் விழிப்பது எப்போது?
/
குடிநீரில் கழிவுநீர் கலப்பு கன்னங்காரணியில் அபாயம் ஊராட்சி நிர்வாகம் விழிப்பது எப்போது?
குடிநீரில் கழிவுநீர் கலப்பு கன்னங்காரணியில் அபாயம் ஊராட்சி நிர்வாகம் விழிப்பது எப்போது?
குடிநீரில் கழிவுநீர் கலப்பு கன்னங்காரணியில் அபாயம் ஊராட்சி நிர்வாகம் விழிப்பது எப்போது?
ADDED : நவ 20, 2025 03:41 AM

திருவள்ளூர்: கன்னங்காரணி மேல்நிலை குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் தேங்கியுள்ள கழிவுநீர், குடிநீர் குழாயில் கலந்து வருவதால், கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பூண்டி ஒன்றியம் பாண்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது கன்னங்காரணி. பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி அருகே அமைந்துள்ள இந்த குடியிருப்பு பகுதியில், 250க்கும் மேற்பட்ட வீடுகளில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க, 2023 - 24ம் ஆண்டு, ஜல் ஜீவன் திட்டத்தில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, 27.25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் கீழ் பகுதியில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், தங்கள் கால்நடைகளின் கழிவுகளை கொட்டி வருகின்றனர். தற்போது, பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பியுள்ளதால், இந்த குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.
தண்ணீருடன், மாட்டு சாணமும் கலந்து, குடிநீர் குழாயில் சேர்ந்து விடுகிறது. இதன் காரணமாக, வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரில், சாணி, கழிவுநீர் கலந்து வருவதால், அதை பயன்படுத்த முடியாத நிலைக்கு, அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஊராட்சி நிர்வாகம், குடிநீர் தொட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக உள்ளது. இதன் காரணமாக, கன்னங்காரணி கிராம மக்கள், சுத்தமான குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பூண்டி ஒன்றிய நிர்வாகம், குடிநீர் தொட்டியைச் சுற்றிலும் சுத்தம் செய்து, மாட்டு சாணியை கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

