/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து
/
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து
மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து
ADDED : மே 05, 2025 11:57 PM
திருவள்ளூர்,
கோடை வெயில் காரணமாக, இம்மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து செய்யப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் மாதந்தோறும் புதன்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
தற்போது, கோடைக்காலம் காரணமாக, இன்று மற்றும் வரும் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய நாட்களில் கத்திரி வெயில் காரணமாக, முகாம் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், அடையாள அட்டை தேவைப்படுவோர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை, 94999 33496 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.