/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு
/
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு
பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுக்க கிருமி நாசினி தெளிப்பு
ADDED : அக் 30, 2025 12:18 AM

திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும், பருவகால நோய் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பருவகால நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தேங்கிய மழைநீரில் உருவாகும் கொசு புழு காரணமாக, டெங்கு காய்ச்சல் பாதித்து வருகிறது.
கமிஷனர் தாமோதரன் உத்தரவின்படி, நகராட்சி பகுதிகளில் சுகாதார ஊழியர்கள், கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளித்து, கொசு புகை அடித்து வருகின்றனர்.
அதேபோல், நகராட்சியில் உள்ள 10 நகராட்சி பள்ளிகள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி - 4 மற்றும் ஆதிதிராவிடர் நலப்பள்ளி - 1 என, மொத்தம் 15 பள்ளிகளில், நேற்று காலை நகராட்சி சுகாதார பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.
அதன்பின், பிளீச்சிங் பவுடர், பள்ளி வகுப்பறை, வளாகத்தில் கிருமிநாசினி தெளித்தனர். மேலும், பள்ளி வளாகம் முழுதும் கொசு புகை அடிக்கப்பட்டது. குடிநீர் தொட்டிகளும் சுத்தம் செய்யப்பட்டது.
இதை தவிர, நகராட்சியில் உள்ள 32 பள்ளி மாணவ - மாணவியருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கும் பணி நடைபெற்று வருவதாக, சுகாதார அலுவலர் மோகன் தெரிவித்தார்.

