தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ தம்பதி இடையே தகராறு: மனைவி மாயமானதாக புகார்

தம்பதி இடையே தகராறு: மனைவி மாயமானதாக புகார்

தம்பதி இடையே தகராறு: மனைவி மாயமானதாக புகார்


UPDATED : ஜூலை 30, 2026 10:18 PM

ADDED : ஜூலை 30, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2026 10:18 PM ADDED : ஜூலை 30, 2026 08:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: காக்களூர் பகுதியில், தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில், மாயமான மனைவியை மீட்டுத் தரும்படி, கணவன் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 41. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு பிரியா, 34, என்ற மனைவியும் ஆண், பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர். பிரியா, காக்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 28ம் தேதி மாலை, தம்பதியிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதையடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய பிரியா, பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, கன்னியப்பன் நேற்று முன்தினம் கொடுத்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us