/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு
/
வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு
வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு
வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவுநீர் சுகாதார நிலையத்தில் சீர்கேடு
ADDED : ஜூன் 14, 2025 01:49 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கர்ப்பிணியர் உட்பட, தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
தற்போது, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழிப்பறை செப்டிக் டேங்க் நிரம்பியுள்ளது. கழிவுநீர் கசிந்து வெளியேறி ஆங்காங்கே குளம் போல தேங்கி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேறும் பக்கத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்கும் அறை உள்ளது.
இதனால், அவர்கள் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செப்டிக் டேங்க் கழிவுநீரை வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.