/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சப்-கலெக்டர் அலுவலக நுழை வாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களால் இடையூறு

ADDED : பிப் 14, 2025 02:21 AM

பொன்னேரி:பொன்னேரி தாலுக்கா அலுவலக சாலையில், சப்-கலெக்டர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, தினமும், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அதிகாரிகளை சந்திக்க வந்து செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கொண்டு வரும் இரு சக்கர வாகனங்களை அலுவலக நுழை வாயிலை மறித்து குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
தற்போது தாலுக்கா அலுவலக சாலையின் இருபுறமும் கான்கிரீட் கற்கள் பதித்து, வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக தளம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சப்-கலெக்டர் அலுவலம் வராமல், நேரடியாக நுழைவாயிலில் அவற்றை கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. நுழைவு வாயில் பகுதியை ஆக்கிரமிக்கும் வாகனங்களை வெளி வளாகங்களில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.