/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீப்பாய்ந்த மண்டபம் செல்லும் பாதை பயன்பாட்டிற்கு வராததால் அதிருப்தி
/
தீப்பாய்ந்த மண்டபம் செல்லும் பாதை பயன்பாட்டிற்கு வராததால் அதிருப்தி
தீப்பாய்ந்த மண்டபம் செல்லும் பாதை பயன்பாட்டிற்கு வராததால் அதிருப்தி
தீப்பாய்ந்த மண்டபம் செல்லும் பாதை பயன்பாட்டிற்கு வராததால் அதிருப்தி
ADDED : ஆக 17, 2025 01:51 AM

திருவாலங்காடு:தீப்பாய்ந்த மண்டபம் செல்லும் பாதையில், கழிவுநீர் செல்ல உருளைகள் அமைக்கும் பணி முடிந்த நிலையில், மீண்டும் பயன்பாட்டிற்கு வராததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருவாலங்காடு ஊராட்சியில் இருந்து, மணவூர் செல்லும் சாலையில் உள்ள பராசக்தி நகரில், 1,000 ஆண்டுகள் பழமையான தீப்பாய்ந்த மண்டபம் அமைந்துள்ளது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் தொடர்புடைய இந்த மண்டபத்தை, வரலாற்று ஆய்வாளர்கள் பலர் ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களும் கலை நுட்பத்தை கண்டுகளித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், பராசக்தி நகரில் சேகரமாகும் கழிவுநீர், தீப்பாய்ந்த மண்டபம் அருகே உள்ள குட்டையில் விட தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தீப்பாய்ந்த மண்டபம் அருகே கழிவுநீர் தேங்காமல் கடந்து செல்ல உருளைகள் அமைக்கும் பணி நடந்தது. ஒரு மாதத்திற்கு முன் பணி நிறைவடைந்த நிலையில், தீப்பாய்ந்த மண்டபத்திற்கு செல்லும் பாதை சீரமைக்கப்படவில்லை.
மேடு, பள்ளமாக இருப்பதால், பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தீப்பாய்ந்த மண்டப வழியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.