/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர இறைச்சி கடைகளால் அதிருப்தி
/
சாலையோர இறைச்சி கடைகளால் அதிருப்தி
ADDED : ஏப் 08, 2025 06:24 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு தாலுகாவில் ஆடு அடிக்கும் தொட்டி இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. இதனால், சாலையோரத்தில் ஆடு, மாடு, கோழி, மீன் உள்ளிட்டவற்றை வெட்டி விற்பனை செய்யும் கடைகள் அதிகரித்து வருகின்றன.
சாலையோரத்தில் விற்பனை செய்யப்படுவதால், அந்த வழியாக நடந்து செல்லும் சைவ சன்மார்க்கத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் சைவ உணவு வழக்கத்தை பின்பற்றுபவர்கள், பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திறந்தவெளியில் செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் நகருக்கு வெளியே ஏரிக்கரை மற்றும் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இந்த பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தெருநாய்கள் உட்கொண்டு வளர்கின்றன.
சோளிங்கரில், சந்தை வளாகத்தில் இறைச்சி கூடங்கள் ஒருங்கிணைந்து ஒரே இடத்தில் செயல்பட்டு வருகிறது. கோவில் நகரமான சோளிங்கர் நகரில் இறைச்சி கூடத்தை தாண்டி எந்தவொரு பகுதியிலும் இறைச்சி விற்பனை செய்யப்படுவது இல்லை.
இதே போல், ஆர்.கே.பேட்டை தாலுகா, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளிலும், இறைச்சி விற்பனை கூடங்களை தனி வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

