/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தக்கைப்பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம்
/
தக்கைப்பூண்டு விதைகள் விவசாயிகளுக்கு வினியோகம்
ADDED : ஜூலை 20, 2025 10:40 PM
திருத்தணி:விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு விதைகள் நேற்று முன்தினம் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், உரத்திற்கு பதிலாக தக்கைப்பூண்டு பயிரிட்டு, பின் அதை உழுது நெல், வேர்க்கடலை போன்றவற்றை பயிரிடுகின்றனர்.
குறிப்பாக, நெல் பயிரிடும் விவசாயிகள், அதிகளவில் தக்கைப்பூண்டு விதைகளை பயிரிட்டு, வளர்ந்த பின் டிராக்டர் மூலம் உழுது நெல் பயிரிடுகின்றனர்.
சில மாதங்களாக, வேளாண் துறையினர் தக்கைப்பூண்டு விதைகள் வழங்காமல் விவசாயிகளை அலைக்கழித்து வந்தனர். இதனால் சில விவசாயிகள், ஆந்திர மாநிலத்திற்கு சென்று, விதைகள் வாங்கி பயிரிட்டு வந்தனர்.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் முதல் வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:
திருவள்ளூர், கடம்பத்துார், பூண்டி, திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஆகிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் வேளாண் விரிவாக்க மையத்திற்கு, 2,000 - 4,000 கிலோ வரை தக்கைப்பூண்டு விதைகள் வந்துள்ளன. மொத்தம் 14,000 விதைகள் வந்துள்ளன. இந்த விதைகள், விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.