sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடம்... 2,461 அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு

/

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடம்... 2,461 அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடம்... 2,461 அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு

சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடம்... 2,461 அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு


ADDED : மார் 02, 2025 11:53 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில், 1,707 சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், அங்கன்வாடி மையங்களிலும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, 754 பணியிடங்கள் காலியாக உள்ளன. மொத்தம் உள்ள 2,461 காலி பணியிடங்களின் விபரங்களை சேகரித்து, அரசுக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில், 1 - 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ - மாணவியருக்கு, எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டம் வாயிலாக, மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

திங்கள் முதல் வெள்ளி வரை வெஜிடபிள் பிரியாணி, சாதம், கொண்டக்கடலை குழம்பு, தக்காளி, கருவேப்பிலை, கீரை, சாம்பார், புளி, எலுமிச்சை போன்ற கலவை சாதமும், சத்தாண கீரை, காய்கறிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றுடன், தினமும் முட்டையும் வழங்கப்படுகிறது.

இதற்காக, மாவட்டம் முழுதும் 1,535 பள்ளிகளில் சத்துணவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அப்பள்ளிகளில் பயிலும், 1,90,425 மாணவ - மாணவியரில், 1,42,832 பேர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

சத்துணவு சாப்பிடுவோரில், 1,42,561 பேர் முட்டையும் சாப்பிடுகின்றனர். முட்டை சாப்பிடாத 271 பேருக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு சத்துணவு தயாரிக்க, 1,477 அமைப்பாளர், 1,500 சமையலர், 1,505 உதவியாளர் என, 4,482 பேர் பணிபுரிய வேண்டும்.

ஆனால், 758 சத்துணவு அமைப்பாளர், 1,173 சமையலர் மற்றும் 844 உதவியாளர் என, 2,775 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். சத்துணவு அமைப்பாளர் 719, சமையலர் 327 மற்றும் உதவியாளர் 661 என, 1,707 பணியிடங்கள் காலியாக உள்ளது.

அங்கன்வாடி மையங்கள்


மாவட்டத்தில், கர்ப்பிணியர், பிறந்த 6 மாதம் முதல் 60 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அமைக்க, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மையங்களில், மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்த்தல், முன்பருவ கல்வி, இணை உணவு, சத்துணவு மற்றும் தடுப்பூசி போன்ற திட்ட பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில், புழல் ஒன்றியத்தை தவிர்த்து, மீதமுள்ள 13 ஒன்றியங்களில், 1,757 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில், ஆறு மாதம் முதல் மூன்று வயது வரை, 36,736 குழந்தைகளுக்கு இணை உணவு, 37,703 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது.

மேலும், 11,933 கர்ப்பிணியர், 10,235 தாய்மார்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அவலம்


இந்த மையங்களில், 1,718 அங்கன்வாடி பணியாளர்களில் 1,303 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில், 415 இடங்கள் காலியாக உள்ளன. மேலும், அங்கன்வாடி உதவியாளராக, 1,718 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், 1,379 பேர் மட்டுமே பணிபுரிவதால், 339 இடங்கள் காலியாக உள்ளது.

இவ்வாறு பள்ளி சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என, மொத்தம் 2,461 பணியிடம் காலியாக உள்ளது. இதன் காரணமாக, குறைந்த எண்ணிக்கையில் பணிபுரிவோர், காலி பணியிட எண்ணிக்கையில் உள்ளோரின் பணியையும் கூடுதலாக கவனிக்கும் அவலம் நிலவுகிறது.

கூடுதல் பணிச்சுமை, மனஉளைச்சல், மாணவ - மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு தரமான உணவு தயாரிப்பது போன்ற பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, காலி பணியிடங்களை அரசு உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் கூட்டமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பரிந்துரை

இதுகுறித்து மாவட்ட சத்துணவு துறை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் உள்ள காலி பணியிடம் சேகரிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. அரசு உத்தரவிட்டதும், காலி பணியிடங்கள் நிரப்பப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us