/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தற்காலிக கொடி கம்பம் அமைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு
/
தற்காலிக கொடி கம்பம் அமைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு
தற்காலிக கொடி கம்பம் அமைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு
தற்காலிக கொடி கம்பம் அமைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு
ADDED : செப் 26, 2025 10:25 PM
திருவள்ளூர்:தற்காலிக கொடி கம்பம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழகத்தில் அரசியல் கட்சியினர், ஊர்வலம் மற்றும் விழாக்களுக்கு, தற்காலிக கொடிக்கம்பம் அமைக்க, தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி, தற்காலிக கொடி கம்பம் அமைக்க, நிகழ்ச்சிக்கு ஏழு நாட்களுக்கு முன், வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மட்டுமே, கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்கப்படும்.
சாலையின் மையப்பகுதி மற்றும் பாலத்தின் கைப்பிடிகளில், கொடி கம்பம் அமைக்க அனுமதி கிடையாது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அந்த கொடியை அமைத்தவர்களே பொறுப்பு. பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், தற்காலிக கொடி கம்பம் அமைத்த அமைப்புகளிடமிருந்து வசூல் செய்யப்படும். நிகழ்ச்சி முடிந்தவுடன் தற்காலிக கொடி அமைத்த அமைப்பு அல்லது கட்சியினர் உடனடியாக அகற்ற வேண்டும்.
இல்லையெனில், அரசு துறை அலுவலர்கள் அகற்றி, அதற்கான செலவு தொகை, கொடி கம்பம் அமைத்தவரிடம் இருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.