/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் திறப்பு விழாவிற்கு தயாரான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
/
திருத்தணியில் திறப்பு விழாவிற்கு தயாரான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
திருத்தணியில் திறப்பு விழாவிற்கு தயாரான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
திருத்தணியில் திறப்பு விழாவிற்கு தயாரான மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை
ADDED : ஏப் 18, 2025 02:18 AM

திருத்தணி:ருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் வட்டார அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 150க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இதுதவிர, திருத்தணி வருவாய் கோட்டத்தில் விபத்துகளில் சிக்கி பலத்த காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க, இந்த மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், போதிய வசதிகள் இல்லாததால், மேல்சிகிச்சைக்கு திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது. அதே ஆண்டு சட்டசபையில், திருத்தணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையும் வெளியிட்டார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 'டெண்டர்' விடப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் கட்டட பணி நிறைவடைந்தது. ஆனால், திறப்பு விழா காணாமல் மூன்று மாதங்களுக்கு மேலாக காத்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்னேரி ஆண்டார்குப்பம் பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
அங்கிருந்து, காணொலி காட்சி வாயிலாக, திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள காமராஜர் காய்கறி அங்காடி ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார்.