/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்ட அளவிலான தடகள போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
/
மாவட்ட அளவிலான தடகள போட்டி: வீரர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 04, 2025 02:34 AM
திருவள்ளூர்:மாவட்ட அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க, விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தடகள சங்க செயலர் மோகன் பாபு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம், வீரர் - வீராங்கனைகளுக்கான தடகள போட்டிகளை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள், வரும் 14, 15ம் தேதியில், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ - மாணவியர், வரும் 19,21ம் தேதிகளில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அருகில் உள்ள விளையாட்டு மற்றும் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் நடைபெறும், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
எனவே, மாவட்ட அளவிலான தடகள போட்டியில் மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.
இது தொடர்பாக 90874 66646 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.