/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால் இடையூறு
/
நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால் இடையூறு
ADDED : அக் 27, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் புதுமாவிலங்கை ஊராட்சிக்குட்பட்டது அகரம்.
இப்பகுதியில் உள்ள திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள் நெடுஞ்சாலையில் இளைப்பாறுகின்றன.
இதனால், இந்தநெடுஞ்சாலை ஒற்றைவழி சாலையாக மாறியுள்ளதால் இவ்வழியே செல்லும், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுவருகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
மாவட்ட கலெக்டர்உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாதது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.