/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதாள சாக்கடை மூடி உடைப்பு துர்நாற்றம் வீசுவதால் சீர்கேடு
/
பாதாள சாக்கடை மூடி உடைப்பு துர்நாற்றம் வீசுவதால் சீர்கேடு
பாதாள சாக்கடை மூடி உடைப்பு துர்நாற்றம் வீசுவதால் சீர்கேடு
பாதாள சாக்கடை மூடி உடைப்பு துர்நாற்றம் வீசுவதால் சீர்கேடு
ADDED : மார் 21, 2025 02:59 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி ஜெயா நகர் பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி, 13 வது வார்டுக்கு உட்பட்டது ஜெயா நகர். சி.வி.நாயுடு சாலையில் இருந்து சேலை ஊராட்சிக்க செல்லும் வழியில் அந்த நகர் அமைந்துள்ளது. அங்கு, குமரவேல் நகர், ஏ.எஸ்.பி., நகர் உள்பட, 15க்கும் மேற்பட்ட சிறிய நகர்கள் அமைந்துள்ளன. நகராட்சி பகுதியான ஜெயாநகரில், 1000க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. மேலும், புதிது, புதிதாக குடியிருப்பு பகுதிகளும் உருவாகி வருகின்றன.
இக்குடியிருப்புவாசிகளின் வீடுகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர், நகராட்சி பாதாள சாக்கடை திட்டம் வாயிலாக, புட்லுார் அருகில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், குமரவேல் நகரில் பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' எனப்படும் மூடிகள் பல இடங்களில் உடைந்து விட்டது. சில இடத்தில், அந்த 'மேன்ஹோல்' சாலையை விட உயரமாக அமைந்துள்ளது.
'மேன்ஹோல்' மூடி உடைந்து விட்டதால், பாதாள சாக்கடை குழாயில் இருந்து எழும் துர்நாற்றத்தால், அப்பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது, மூடி உடைந்த இடங்களில், கழிவு நீர் வெளியேறி, தெரு முழுதும் தேங்கி விடுகிறது. மேலும், கொசு உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற நோய்களை பரப்பி வருகிறது.
எனவே, நகராட்சி நிர்வாகம், குமரவேல் நகரில் உடைந்த பாதாள சாக்கடை மூடிகளை சீர்படுத்தியும், முறையாக கழிவு நீர் வெளியேற்றவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.