/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டைவிங்' நீச்சல்: தமிழகத்திற்கு 5 வெள்ளி
/
'டைவிங்' நீச்சல்: தமிழகத்திற்கு 5 வெள்ளி
ADDED : டிச 03, 2024 06:18 AM
சென்னை : இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், பள்ளிகளுக்கான 68வது தேசிய விளையாட்டு போட்டிகள், குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடந்து வருகிறது.
இதில், நீச்சல் போட்டியில் 'டைவிங்' குரூப் - 2 சிறுமியர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கே.மிருணாளினி, குரூப் -3 சிறுவர் பிரிவில் பங்கேற்ற, தமிழக வீரர் ஏ.ஆர்.லோகிதாஸ்வா ஆகியோர், 1 மீ., மற்றும் 3 மீ., ஸ்ப்ரிங் போர்டு டைவிங் போட்டியில், தலா இரண்டு வெள்ளி பதக்கங்கள் வென்றனர்.
அதேபோல், குரூப் - 3 சிறுமியர் பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழக வீராங்கனை எஸ்.எம்.சிவாஷ்மி, மூன்று மீட்டர் ஸ்பிரிங் போர்டு பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.முதன்முறையாக தமிழக டைவிங் அணி மொத்தம், 5 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.
பதக்கம் வென்ற மூவரும், வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., நீச்சல் குள வளாகத்தில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.