/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அபாய நிலையில் விடியங்காடு பேருந்து நிறுத்தம்
/
அபாய நிலையில் விடியங்காடு பேருந்து நிறுத்தம்
ADDED : பிப் 13, 2024 08:20 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் வழியாக பொன்னை செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது விடியங்காடு பேருந்து நிறுத்தம். இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து விடியங்காடு கிராமத்திற்கு இணைப்பு சாலை உள்ளது.
விடியங்காட்டில் பேருந்து நிலையம் இருந்தும், ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டுமே வந்து செல்கின்றன. இதனால், விடியங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள், நெடுஞ்சாலையில் இருந்த பேருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், நெடுஞ்சாலையில் விடியங்காடு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பேருந்துகள், சாலையின் நடுவே நின்று செல்கின்றன.
இதனால், இந்த பேருந்துகளை, பின் தொடர்ந்து வரும் வாகனங்கள், பேருந்தில் மோதி விபத்து நேரிடுகிறது. அல்லது மிகவும் குறுகிய கால இடைவெளியில் அந்த பேருந்துகளை கடந்து செல்லும் வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களை கவனிக்கவும் முடிவது இல்லை.
இதனால், இந்த பேருந்து நிறுத்தம் விபத்து முனையமாக மாறிவருகிறது. விபத்துகளை தவிர்க்க, விடியங்காடு பேருந்து நிறுத்தத்திற்கு சாலையோரம் இடம் ஒதுக்கி, இணைப்பு சாலையில் நிழற்குடையுடன் புதிய நிறுத்தம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

