/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் நிரப்பிய தி.மு.க., நகர செயலர் அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் வாக்குவாதம்

ADDED : நவ 14, 2025 02:56 AM

பள்ளிப்பட்டு: வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.க., நகர செயலருடன், அ.தி.மு..க, முன்னாள் அமைச்சர் ரமணா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பள்ளிப்பட்டு நகரில் நேற்று, தி.மு.க., நகர செயலர் செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சோளிங்கர் சாலையில் குழுவாக அமர்ந்து, வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகளை பார்வையிடுவதற்காக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரமணா உள்ளிட்டோர் வந்து கொண்டிருந்தனர்.
வீடு வீடாக சென்று வாக்களர்களிடம் படிவங்களை கொடுத்து நிரப்பாமல், தி.மு.க.,வினர் மேசை, நாற்காலி போட்டு ஒரே இடத்தில் வைத்து நிரப்புவதை கண்டு, ரமணா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தி.மு.க., நகர செயலர் செந்தில்குமாரிடம் கேள்வி எழுப்பினார்.
'எழுத, படிக்க தெரியாத வாக்காளர்களுக்கு, படிவங்களை சேவை மனப்பான்மையுடன் தான் நிரப்பி கொடுக்கிறோம். நாங்கள் முறைகேடாக எதுவும் செய்யவில்லை' என, செந்தில்குமார் தெரிவித்தார்.
'வாக்காளர் கணக்கெடுப்புக்கு தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலையில், அந்த கட்சியின் நகர செயலரான நீங்கள், தற்போது இந்த கணக்கெடுப்பு பணியில் சேவை செய்வதாக கூறுகிறீர்களே' என, ரமணா கேட்டார்.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரின் இந்த வாக்குவாதம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிப்பட்டு வட்டாட்சியர் பாரதி, இரு கட்சியினரிடமும் சமரசம் பேசி அனுப்பினார். அதன்பின், 'முறையாக கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப வேண்டும்' என, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.