/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதிகளை அதிரடியாக நிறைவேற்றிய தி.மு.க.,- எம்.எல்.ஏ., தேர்தல் நெருங்குவதால் கரிசனம்
/
அடிப்படை வசதிகளை அதிரடியாக நிறைவேற்றிய தி.மு.க.,- எம்.எல்.ஏ., தேர்தல் நெருங்குவதால் கரிசனம்
அடிப்படை வசதிகளை அதிரடியாக நிறைவேற்றிய தி.மு.க.,- எம்.எல்.ஏ., தேர்தல் நெருங்குவதால் கரிசனம்
அடிப்படை வசதிகளை அதிரடியாக நிறைவேற்றிய தி.மு.க.,- எம்.எல்.ஏ., தேர்தல் நெருங்குவதால் கரிசனம்
ADDED : ஜூலை 11, 2025 01:11 AM

திருத்தணி:திருத்தணி அருகே பழங்குடியின மக்கள் மின்சாரம், குடிநீர், சாலை வசதியில்லாமல் தவித்து வந்த குடியிருப்பில், தொகுதி எம்.எல்.ஏ., ஒரு நாள் இரவு தங்கி குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து துறை அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பீரகுப்பம் இருளர் காலனியில், 16 குடும்பத்தினர் குடிசை வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் வசதி, மின்வசதி, சாலை போன்ற வசதிகள் இல்லாமல் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பலமுறை ஒன்றிய நிர்வாகம் மற்றும் மின்வாரிய துறையினரிடம் அடிப்படை வசதிகளான மின்விளக்கு, குடிநீர் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணி முதல் நேற்று காலை வரை திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பீரகுப்பம் இருளர் காலனியில் தங்கியிருந்து பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அங்குள்ள பழங்குடியினர் வீட்டில் இரவு சாப்பிட்டார்.
அப்போது பழங்குடியினர், குடிநீர், சாலை வசதியின்றி தவிப்பது, குழந்தைகள் சிம்னி விளக்கு வைத்து படிப்பது போன்றவற்றை நேரில் பார்த்த எம்.எல்.ஏ., சந்திரன், கலெக்டர் பிரதாப்பிடம் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும். என் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்து தருகிறேன் என, கூறினார்.
இதையடுத்து நேற்று ஊரக வளர்ச்சி துறை, குடிநீர் வாரிய துறை மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் பீரகுப்பம் இருளர் காலனிக்கு அடிப்படை வசதிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பழங்குடியின மக்கள் எம்.எல்.ஏ., சந்திரனுக்கு நன்றி தெரிவித்தனர். பலமுறை அதிகாரிகளிடம் அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை வைத்தும் செய்யாத அதிகாரிகள், ஒரே நாளில் அடிப்படை வசதிகளை செய்ய முன்வந்ததன் பின்னணி தேர்தல் நெருங்குவதை காட்டுகிறது என, பழங்குடியினர் முனு முனுத்தனர்.