/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வங்கனுார் - பொதட்டூர் செல்ல மாநில எல்லை தாண்டணுமா?
/
வங்கனுார் - பொதட்டூர் செல்ல மாநில எல்லை தாண்டணுமா?
வங்கனுார் - பொதட்டூர் செல்ல மாநில எல்லை தாண்டணுமா?
வங்கனுார் - பொதட்டூர் செல்ல மாநில எல்லை தாண்டணுமா?
ADDED : ஜன 31, 2025 09:21 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், பாலசமுத்திரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் இருந்து பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், நெசவு தொழில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், நெசவாளர்கள் இந்த மார்க்கத்தில் இருசக்கர வாகனங்களில் அதிகளவில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் பலிஜிகண்டிகையில் செயல்படும் சுங்கச்சாவடி மற்றும் காவல் துறை சாவடிகளை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
தமிழகத்தின் இரண்டு ஒன்றியங்களுக்கு இடையே கடந்து செல்ல, மாநில எல்லையையும், சோதனை சாவடிகளையும் கடக்க வேண்டிய நிலை உள்ளது.
அதனால், நெசவாளர்கள் தங்களின் தொழில் மூலப்பொருட்களான நுால், பாவு உள்ளிட்டவற்றை கொண்டு செல்வதில், பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.பேட்டையில் இருந்து வங்கனுார் வழியாக, பொதட்டூர்பேட்டைக்கு உள்ள தார் சாலையை விரிவாக்கம் செய்யவும், இந்த மார்க்கத்தில் பேருந்து சேவையை துவக்கவும் வேண்டும் என, நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், இந்த மார்க்கத்தில் மினி பேருந்து சேவை செயல்பட்டு வந்தது. இந்த சேவை வாயிலாக, நெசவாளர்கள் பயனடைந்து வந்தனர்.
இந்த மார்க்கத்தில் பயணிப்பதால், ஆந்திர மாநில எல்லைக்குள் நுழையாமல் பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு பயணிக்க முடியும்.