/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் நாய்கள் தொல்லை
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் நாய்கள் தொல்லை
ADDED : டிச 22, 2024 08:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில், 15,000 பேர் வசித்து வருகின்றனர். மிக குறுகலான தெருக்களுடன் அமைந்துள்ள இந்த கிராமத்தில், சில வாரஙகளாக தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
தெருவில் நடமாடும் பகுதிகளை நாய்கள் துரத்தி கடித்து வருகின்றன. இதனால், பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மாதத்தில் மட்டும், கொடிவலசா மற்றும் அத்திமாஞ்சேரிபேட்டையில், 20க்கும் மேற்பட்டோர், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெருவில் நடமாட பகுதிவாசிகள் அச்சப்படுகின்றனர். கால்நடை துறையினருடன் ஊராட்சி நிர்வாகம் இணைந்து, நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.