/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இறைச்சி கழிவுகளால் திசைமாறும் நாய்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அவலம்
/
இறைச்சி கழிவுகளால் திசைமாறும் நாய்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அவலம்
இறைச்சி கழிவுகளால் திசைமாறும் நாய்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அவலம்
இறைச்சி கழிவுகளால் திசைமாறும் நாய்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அவலம்
ADDED : ஏப் 12, 2025 09:29 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றிய கிராமங்களில், இறைச்சி கடைகள் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இறைச்சி கழிவுகளை அகற்றுவதில் உள்ளாட்சி அமைப்பினரும், விற்பனையாளர்களும் அலட்சியத்துடன் செயல்படுகின்றனர்.
வாரந்தோறும் சேகரமாகும் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர். குறிப்பாக சாலையோரம் மற்றும் மழைநீர் கால்வாய்களிலும் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர்.
மேலும், கோழி கழிவுகள் திறந்தவெளியில் வீசப்படுவதால், அப்பகுதியில் நடமாட முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் மட்கும் முன், அதிலிருந்து நோய் உண்டாக்கும் கிருமிகளும் கால்நடைகளுக்கு பரவுகின்றன.
சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், மணவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள் தொடர்ந்து வீசப்படுகின்றன.
வேட்டையாடும் நாய்கள்!
திறந்தவெளியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தேடி தெருநாய்கள் அப்பகுதியில் முகாமிடுகின்றன. இவ்வகை இறைச்சியால் ஈர்க்கப்படும் தெருநாய்கள், கழிவுகள் இல்லாத போது, கால்நடைகளை கடித்து குதறுவது தொடர்கதையாகியுள்ளது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள் கிராமத்தில் இறைச்சி விற்பனை செய்வோருக்கு, எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிப்பதில்லை. இதனால், அனைத்து கிராமங்கள் மற்றும் நகர எல்லை பகுதிகளில் இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து உள்ளாட்சி நிர்வாகங்கள் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், தெருநாய்களால், மனிதர்களும் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.