/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூடைப்பந்தில் டான்பாஸ்கோ பள்ளி த்ரில் வெற்றி
/
கூடைப்பந்தில் டான்பாஸ்கோ பள்ளி த்ரில் வெற்றி
ADDED : டிச 04, 2024 11:26 PM

சென்னை, சேத்துப்பட்டில் நடந்து வரும் பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில், மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.
எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுகளை, சேத்துப்பட்டு பள்ளி வளாகத்தில் நடத்தி வருகிறது. மழையால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள், நேற்று மீண்டும் துவங்கின.
நேற்று நடந்த இருபாலருக்கான கூடைப்பந்து போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. மாணவருக்கான முதல் போட்டியில், எம்.சி.சி., பள்ளி, 32 - 21 என்ற கணக்கில் இந்து பள்ளியையும், பி.ஏ.கே., பழனிசாமி பள்ளி, 29 - 16 என்ற கணக்கில் சர் முத்தா பள்ளியையும் வீழ்த்தின.
மற்றொரு போட்டியில், பெரவள்ளூர் டான்பாஸ்கோ பள்ளி, 42 - 40 என்ற கணக்கில், எஸ்.எம்.பி., ஜெயின் பள்ளியை தோற்கடித்தது.
மாணவியருக்கான ஆட்டத்தில், செயின்ட் ஜோசப் பள்ளி, 34 - 20 என்ற கணக்கில் அரசு பெண்கள் பள்ளியையும், செயின்ட் ராபேல் பள்ளி, 14 - 8 என்ற கணக்கில் எம்.சி.சி., பள்ளியையும் தோற்கடித்தன. போட்டிகள் தொடர்கின்றன.