ADDED : பிப் 17, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 27; இவர், சென்னையில் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன், 'ஸ்பிளன்டர் பிளஸ்' இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணியில், சில மாதங்களாகவே வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் முன் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

