/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
தண்டலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தண்டலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
தண்டலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : மார் 05, 2024 06:29 AM

கடம்பத்துார்: தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்கிருந்து மப்பேடு செல்லும் நெடுஞ்சாலையோரம், கீழச்சேரி ஊராட்சி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.
குடிநீர் வீணாவது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் இப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவதை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொண்டஞ்சேரி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.