/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நான்கு பேரை காப்பாற்றி டிரைவர் மாரடைப்பால் பலி
/
நான்கு பேரை காப்பாற்றி டிரைவர் மாரடைப்பால் பலி
ADDED : ஜன 07, 2025 08:52 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், பீரகுப்பத்தைச் சேர்ந்தவர் வம்சிகிருஷ்ணா, 30; இவர், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று, அதிகாலை 3.30 மணிக்கு திருப்பதியில் இருந்து, 'இன்னோவா கிரிஸ்டா' டிராவல்ஸ் காரில், நான்கு பேரை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி சென்றார்.
திருப்பதி ---- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே வந்தபோது, வம்சிகிருஷ்ணாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால் உடனடியாக காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு இறங்கியவர் மயங்கி விழுந்தார். காரில் பயணம் செய்தவர்கள் அவரை மீட்டு கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வம்சிகிருஷ்ணா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.