/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் - லாரி மோதல் ஓட்டுநர் உயிரிழப்பு
/
பைக் - லாரி மோதல் ஓட்டுநர் உயிரிழப்பு
ADDED : நவ 10, 2025 11:03 PM
திருவள்ளூர்: இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் அடுத்த அதிகத்துாரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 53. இவர், அதிகத்துார் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், திருவள்ளூரில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, ஆயில் மில் அருகே வந்தபோது, பின்னால் வந்த 'டாடா' டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஏழுமழை உயிரிழந்தார்.
தகவலறிந்த திருவள்ளூர் நகர போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் நகர போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

