ADDED : மார் 19, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி: பொன்னேரி அடுத்த அப்பளாவரம் பகுதியில் வசித்தவர் சுந்தரம், 38. லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை தச்சூரில் இருந்து ஆந்திரா நோக்கி, டிப்பர் லாரி ஓட்டி சென்றுக்கொண்டிருந்தார்.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், புதுவாயல் மேம்பாலத்தில் பழுதாகி நின்றிருந்த மாற்றொரு லாரியின் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை மீட்டவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

