/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுநருக்கு நெஞ்சு வலி மரத்தில் மோதி பரிதாப பலி
/
ஓட்டுநருக்கு நெஞ்சு வலி மரத்தில் மோதி பரிதாப பலி
ADDED : மார் 31, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, வைப்பமாலை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன், 40; லாரி ஓட்டுநர்.
திருச்செங்கோட்டில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை செல்லும் வழியில், பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி கிராமத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, லாரி ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால், லாரி நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.