/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் லாரிகள் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையோரம் லாரிகள் நிறுத்தம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 08, 2025 01:38 AM

திருவாலங்காடு:திருவாலங்காடில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் மண் லாரி, தனியார் நிறுவன பேருந்து உள்ளிட்டவற்றால், வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இங்கு, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி பி.டி.ஓ., அலுவலகம், மருத்துவமனை, வேளாண் அலுவலகம், அரசு பள்ளிகள் அமைந்துள்ளன.
மண் ஏற்றி செல்லும் லாரிகள், பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவன பேருந்துகள், காலை - மாலை நேரங்களில் திருவாலங்காடு மேல்நிலைப் பள்ளி முதல் தேரடி வரையில் சாலையோரம் அணிவகுத்து நிற்கின்றன.
இதனால், சாலை குறுகி, வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், பள்ளி நேரத்தில் லாரிகள் நிற்பதால், சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் மாணவ - மாணவியர் அச்சத்துடன் கடந்து செல்வதாக கூறுகின்றனர்.
எனவே, மாணவ - மாணவியர் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, திருவாலங்காடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடு த்துள்ளனர்.