/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்
/
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்
ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 10, 2025 10:58 PM

திருவாலங்காடு: திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடக்கும் வாகன ஓட்டிகளால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த மார்க்கமாக, தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
திருவாலங்காடு அடுத்த அரிசந்திராபுரம் ரயில்வே தண்டவாளத்தை கடந்து, அரக்கோணம் --- திருவாலங்காடு மாநில நெடுஞ் சாலை செல்கிறது.
இச்சாலை வழியாக, தினமும் 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, தண்டவாளத்தை வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக கடந்து செல்ல, ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேட் 10 - 20 நிமிடங்களுக்கு ஒரு முறை திறக்கப் படுகிறது.
சில இருசக்கர வாகன ஓட்டிகள், கேட் மூடப்பட்டிருந்தாலும் ஆபத்தை உணராமல், ஒன்றாவது தண்டவாளத்தில் ரயில் சென்றால், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது தண்ட வாளத்தை கடக்க வரிசை கட்டி நிற்கின்றனர்.
அச்சமயத்தில் ரயில் வந்தால், உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, அரிசந்திராபுரத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

