ADDED : ஏப் 03, 2025 02:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் முழுதும் காவல் துறையினர், பள்ளி மாணவ - மாணவியருக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நேற்று, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்.பி., சீனிவாச பெருமாள், பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினார்.
தொடர்ந்து, மாவட்ட அலுவலக சுற்றுச்சுவரில் சாலை பாதுகாப்பு, போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை சிறப்பாக வரைந்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கினார்.
இதில், குப்பம்மாள்சத்திரம், சிறுவானுார்கண்டிகை ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளி , திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 35 பேர் மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.