/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பாக்கு கேட்டவர் பணத்துடன் ‛'எஸ்கேப்'
/
போதை பாக்கு கேட்டவர் பணத்துடன் ‛'எஸ்கேப்'
ADDED : ஜூலை 25, 2025 10:11 PM
ஆர்.கே.பேட்டை:இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் போதை பாக்கு கேட்ட மர்மநபர், சட்டை பையில் இருந்த 10,000 ரூபாயுடன் தப்பியோடினார்.
ஆர்.கே.பேட்டை அடுத்த அமுதாரெட்டிகண்டிகையைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 57. இவர், நேற்று முன்தினம் மாலை சோளிங்கரில் இருந்து ஆர்.கே.பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆர்.கே.பேட்டை சிப்காட் அருகே வந்த போது, சாலையோரம் வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கோவிந்தராஜிடம் போதை பாக்கு கேட்டு, அவரது சட்டை பையில் கைவிட்ட போது, 10,000 ரூபாய் இருந்துள்ளது. அதை எடுத்துக் கொண்டு மர்மநபர் தப்பியோடினார்.
இதுகுறித்து கோவிந்தராஜ், ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.