/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டி
/
போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டி
ADDED : ஜூன் 14, 2025 08:57 PM
திருவள்ளூர்:சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம், வரும் 26ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஓவிய போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம்.
மாணவ - மாணவியர் தங்கள் படைப்புகளை nmbatrl25@gmail.com என்ற 'இ மெயில்' மற்றும் 94989 01098 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணில், வரும் 21ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
தங்கள் படைப்புடன், குழந்தையின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை சரியாக குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.