/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதைப்பொருள் 'சப்ளை' ஆப்ரிக்க வாலிபர் கைது
/
போதைப்பொருள் 'சப்ளை' ஆப்ரிக்க வாலிபர் கைது
ADDED : அக் 23, 2024 09:20 PM
அரும்பாக்கம்:அரும்பாக்கம், திருவீதியம்மன் கோவில் அருகில், மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் விற்ற, கொடுங்கையூரைச் சேர்ந்த தீபக், 31, அவரது மனைவி டாலி மேத்தா, 27, ஆகியோர், கடந்த வாரம் சிக்கினர்.
இவர்கள் அளித்த தகவலின்படி, வியாசர்பாடியைச் சேர்ந்த முத்துக்குமார், 36, அம்பத்துாரைச் சேர்ந்த அருண், 25, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து, அம்பத்துாரைச் சேர்ந்த சித்தார்த், 28, மற்றும் தீபக்ராஜ், 25, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் அரும்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, 25 கிராம் மெத்தாம்பெட்டமைன் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் விசாரித்ததில், மேற்கு ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த அபித் குளோச், 32, என்பவர், வெவ்வேறு வழிகளில் சென்னைக்கு போதைப்பொருள் 'சப்ளை' செய்தது தெரிந்தது.
இந்நிலையில், பெங்களூரில் பதுங்கி இருந்த அபித் குளோச்சை, அரும்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்து, அவரிடமிருந்த, 5.8 கிராம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
அவருக்கு உடைந்தையாக இருந்த, பெங்களூரைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் அந்தோணி ஆகிய இருவரையும் நேற்று பிடித்து, சென்னை அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.