ADDED : பிப் 09, 2025 09:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, அண்ணாநகர் பகுதியில் தமிழக - ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்தவரை சோதனை செய்தனர்.
அவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல், விஐ, கூல் லிப் உள்ளிட்ட, 18 போதை பொருட்களை வைத்திருந்தார். விசாரணையில் அவர், சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சம்சுதீன், 48, என்பது தெரிய வந்தது.
ஊத்துக்கோட்டை போலீசார் அவரை கைது செய்து, போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.