/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபோதையில் கற்களை வீசி பெண் ரகளை
/
மதுபோதையில் கற்களை வீசி பெண் ரகளை
ADDED : ஜூலை 10, 2025 09:28 PM
பொன்னேரி:மதுபோதையில் சாலையில் செல்வோர் மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பொன்னேரி தேரடி சாலை சந்திப்பு பகுதியானது, காலை, மாலை நேரங்களில் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலுடனும் இருக்கும்.
நேற்று முன்தினம் இரவு, 40வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மதுபோதையில் சாலையின் நடுவில் அமர்ந்து அவ்வழியே சென்ற வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்டார்.
பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஒட்டிகள் மீது கற்களை வீசினார். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணால் தேரடி பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.