ADDED : மார் 12, 2024 05:12 AM
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அருகே கரும்புகுப்பம் கிராமத்தில் வசித்தவர் தினேஷ், 32. ரயில்வே ஒப்பந்த ஊழியர். ஏழு மாதங்களுக்கு முன், சிறுபுழல்பேட்டை கிராமத்தை சேர்ந்த பிரதிபா, 28, என்ற பெண்ணை திருமணம் செய்தார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒரு மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், இம்மாதம், 8ம் தேதி, வீட்டில் துாக்கிட்டு தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக, அவரது மனைவி பிரதிபா, மனைவியின் அக்கா கணவர் ராஜா ஆகியோர் தன்னை தொடர்ந்து மிரட்டுவதாக வீடியோ ஒன்றை, தினேஷ் பதிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, தினேஷின் உறவினர்கள், நேற்று கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

