/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடில் ஆட்கள் பற்றாக்குறையால் நாற்று நடவு பணியில் வடமாநிலத்தவர்கள்
/
திருவாலங்காடில் ஆட்கள் பற்றாக்குறையால் நாற்று நடவு பணியில் வடமாநிலத்தவர்கள்
திருவாலங்காடில் ஆட்கள் பற்றாக்குறையால் நாற்று நடவு பணியில் வடமாநிலத்தவர்கள்
திருவாலங்காடில் ஆட்கள் பற்றாக்குறையால் நாற்று நடவு பணியில் வடமாநிலத்தவர்கள்
ADDED : ஜன 09, 2025 02:18 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளிலும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதன்படி, பழையனூர், ஓரத்தூர், களாம்பாக்கம், கூளூர் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
இங்கு, நாற்று நடவு பணிகளை செய்ய, உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்து வந்தது. பெரும்பாலானோர் நுாறு நாள் பணிக்கு சென்று விடுவதால், நவரை பருவத்தில் நாற்று நடவு செய்ய ஆட்களின்றி பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் இருந்து, 20, பெண்கள், 10 ஆண்கள் என, 30 பேர், ஏஜன்ட் வாயிலாக, ஓரத்தூர் கிராமத்துக்கு விவசாய பணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள், நேற்று, நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஒரு ஏக்கரில் நாற்று நடவு செய்தால், 4,500 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. மேலும், ஏக்கருக்கு, 5 கிலோ அரிசி, 1 கிலோ காய்கறி கொடுக்கிறோம். தங்க இடவசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 6:00 மணிக்கே நடவு செய்ய வந்து விடுகின்றனர்.
இங்குள்ள விவசாய கூலி தொழிலாளர்கள், நுாறு நாள் வேலை திட்டத்திற்கு சென்று விடுவதால், நாற்று நட வர மறுக்கின்றனர். ஒரு சிலர் வந்தாலும், ஏக்கருக்கு, 10,000 ரூபாய் கூலி கேட்கின்றனர்.
தற்போது, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பீஹார், மஹாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த, 2,000 பேர் மாவட்டத்திற்கு, பல இடங்களுக்கு வந்து, விவசாய பணிகளை குறைந்த கூலியில் செய்வதாக கூறுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

