/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
/
திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
ADDED : ஜூன் 09, 2025 03:25 AM

திருத்தணி:திருத்தணி அடுத்த எஸ். அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த மாதம், 29ம் தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபேிஷகம், மதியம் மகா பாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடந்தது.
கடந்த 2ம் தேதி திரவுபதியம்மன் திருமணமும், 5ம் தேதி அர்ஜூனன் தபசும் நடந்தது. நேற்று காலை, 11:00 மணியளவில் கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன், துரியோதனனை வதம் செய்தார்.
தொடர்ந்து எஸ்.அக்ரஹாரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
இரவு, 7:00 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு, வாணவேடிக்கை மற்றும் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.