/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் காதுகுத்தல் கட்டணம் குறைப்பு
/
திருத்தணி முருகன் கோவிலில் காதுகுத்தல் கட்டணம் குறைப்பு
திருத்தணி முருகன் கோவிலில் காதுகுத்தல் கட்டணம் குறைப்பு
திருத்தணி முருகன் கோவிலில் காதுகுத்தல் கட்டணம் குறைப்பு
ADDED : டிச 04, 2024 11:36 PM

திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும், காதுகுத்தியும் முருகப்பெருமானை வழிபடுவர்.
கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக மலைக்கோவில் வளாகத்தில் காதுகுத்துவதற்கும், திருமணங்கள் நடத்துவதற்கு தனியாக மண்டபம் ஏற்படுத்தி அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல ஆண்டுகளாக மலைக்கோவிலில் காதுகுத்துவதற்கு, தனிநபர்கள் ஏலம் எடுத்து, ஒரு குழந்தைக்கு காதுகுத்துவதற்கு குறைந்தபட்சம், 301 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்த கூட்டத்தில், காதுகுத்துவதற்கு, ஒரு குழந்தைக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல், காதுகுத்துவதற்கு, 50 ரூபாய் கட்டணமாக கோவில் நிர்வாகமே வசூலிக்கிறது.
மேலும், மண்டபம் நுழைவாயிலில், காதுகுத்தலுக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும், இடைத்தரகர்கள் மற்றும் தனிநபர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
காதுகுத்தல் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தால், 044 - 27885247 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என, தமிழ், ஆங்கிலம் மற்றும் தெலுங்கு என, மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.