sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் அரசு பள்ளிகளில் கல்வி, சுகாதாரம்...கேள்விக்குறி:ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை இல்லாமல் அவதி

/

திருவள்ளூர் அரசு பள்ளிகளில் கல்வி, சுகாதாரம்...கேள்விக்குறி:ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை இல்லாமல் அவதி

திருவள்ளூர் அரசு பள்ளிகளில் கல்வி, சுகாதாரம்...கேள்விக்குறி:ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை இல்லாமல் அவதி

திருவள்ளூர் அரசு பள்ளிகளில் கல்வி, சுகாதாரம்...கேள்விக்குறி:ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிப்பறை இல்லாமல் அவதி


ADDED : ஜூன் 09, 2025 03:08 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 752 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மாணவ- மாணவியர் சிரமப்படுகின்றனர். இதனால் கல்வி, சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 944 துவக்கப்பள்ளிகள், 265 நடுநிலைப்பள்ளிகள், 145, உயர்நிலைப்பள்ளிகள், 118, மேல்நிலைப்பள்ளிகள், என 1,472 அரசு பள்ளிகள் உள்ளன.

பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

அரசு பள்ளிகளில் அலுவலக பணியாளர், உதவியாளர், உடற்பயிற்சி ஆசிரியர், ஆய்வக உவியாளர், காவலாளி, துப்புரவு பணியாளர்கள் போன்ற பணியிடங்களும் காலியாக உள்ளன.

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணியாற்ற வேண்டும். ஆனால் பல பள்ளிகளில் இந்த முறை நடைமுறையில் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. மாவட்டம் முழுதும் 752 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் எந்த பள்ளியிலும் இல்லாததால் மாணவர்களின் விளையாட்டுத் திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளி கழிப்பறைகளில் 20 பேருக்கு ஒரு பீங்கான் என நடைமுறையில் உள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் இந்த நடைமுறை இல்லாததால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர், பாதுகாவலர் பணிகளை நியமிக்க வேண்டும். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பறை வசதியும் செய்து தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடமே காலியாக உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மாவட்டத்தில் காலியாக உள்ள 419 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 106 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டது. மீதமுள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் இன்றுவரை பணி ஓய்வு பெற்றவர்களையும் சேர்த்து மொத்தம் 752 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்கள் குறித்து அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

காலிப்பணியிடங்கள்


மொத்த காலிபணியிடங்கள் 752
துவக்கப்பள்ளி 175
நடுநிலைப்பள்ளி 206
உயர்நிலைப்பள்ளி 185
மேல்நிலைப்பள்ளி 186








      Dinamalar
      Follow us