/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் இன்று கல்வி கடன் முகாம்
/
திருவள்ளூரில் இன்று கல்வி கடன் முகாம்
ADDED : பிப் 15, 2024 01:44 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், இன்று சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், இன்று மாலை 5:00 மணியளவில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடக்கிறது.
முகாமில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பொறியியல், டிப்ளமா, மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை மற்றும் நர்சிங் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, வங்கி கடனுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம்.
இதில், 10க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பங்கேற்க உள்ளன. கல்வி கடன் தொடர்பான வங்கிகளின் சிறப்பு அரங்கு, வருவாய் துறை மற்றும் இ - -சேவை மையம் வாயிலாக, கடன் நடைமுறைக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கும் வசதி செய்யப்பட உள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு, கல்வி கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

