/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு
/
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் படித்த திருத்தணி பள்ளியில் கல்வி அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 01, 2024 07:36 AM

திருத்தணி: திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியாகும்.
இப்பள்ளியின் பழைய கட்டடம், 100 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளதால், தற்போது பழுதடைந்துள்ளதால், 2020ம் ஆண்டு முதல், வகுப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டியே இருந்தது.
இதையடுத்து பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷியாம்சுந்தர், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் ஜனாதிபதி படித்த பள்ளியை பழைய கட்டடங்களை சீரமைத்து, புதிய வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அந்த மனுவை பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷுக்கு எம்.எல்.ஏ., சந்திரன் பரிந்துரை செய்தார். இந்நிலையில் நேற்று காலை, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் உதவியாளருடன் திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.
அப்போது வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சலபதி அமைச்சரை வரவேற்று பள்ளி அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்.
அங்கு உதவி தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் இருந்தனர்.
பின் அமைச்சர், பள்ளி ஆவணங்களை பார்த்தும், உதவி தலைமை ஆசிரியரிடம், காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி எவ்வாறு நடக்கிறது என கேட்டறிந்தார்.
பின், பழுதடைந்த மூடப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் படித்த வகுப்பறைகளை சுற்றி பார்த்த அமைச்சர், பழமை மாறாமல் இக்கட்டடம் புதுப்பிக்க முடியுமா என பொறியாளர்களிடம் ஆலோசனை நடத்தி, முடியும் பட்சத்தில் கட்டடத்தை புதுப்பிக்கலாம். தவறும் பட்சத்தில் புதிய வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டுவதற்கு முடிவெடுக்கலாம் என, உதவி தலைமை ஆசிரியரிடம் கூறினார்.
பின், திருவள்ளூர் ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
குறுகிய இடத்தில் இயங்கியதால் அதிருப்தி அடைந்த அமைச்சர், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் விபரம் கேட்டறிந்தார்.
அப்போது, திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகில் மேல்நிலைப் பள்ளி கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அந்த இடத்தை அமைச்சர் பார்வையிட்டார்.