/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூருடன் இணைய எதிர்ப்பு ஈக்காடு மக்கள் சாலை மறியல்
/
திருவள்ளூருடன் இணைய எதிர்ப்பு ஈக்காடு மக்கள் சாலை மறியல்
திருவள்ளூருடன் இணைய எதிர்ப்பு ஈக்காடு மக்கள் சாலை மறியல்
திருவள்ளூருடன் இணைய எதிர்ப்பு ஈக்காடு மக்கள் சாலை மறியல்
ADDED : ஜன 04, 2025 09:50 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியுடன், இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈக்காடு கிராமவாசிகள் செங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் நகராட்சியுடன், ஈக்காடு, காக்களூர், சேலை, திருப்பாச்சூர், வெங்கத்துார், தலக்காஞ்சேரி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தகவல் வெளியானது.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, ஏற்கனவே 9 ஊராட்சிகளைச் சேர்ந்தோர் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் மனு அளித்தனர்.
இந்த நிலையில், அதிகாரப்பூர்வமாக இணைப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று, திருவள்ளூர் - செங்குன்றம் சாலை, கிருஷ்ணா நீர் கால்வாய் பாலம் அருகில், ஈக்காடு கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மகளிர் குழுவினர், நுாறு நாள் வேலை திட்ட பணியாளர் மற்றும் பொதுமக்கள் என, 300க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும், திருவள்ளூர் தாலுகா, டவுன், புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சு நடத்தினர்.
ஆனால், பொதுமக்கள் மறியலை கைவிடாததால், போலீசார் கயிறு கட்டி பொதுமக்களை சாலையோரம் நிறுத்தினர். சிறிது நேரத்தில் பொதுமக்கள் கலைந்து சென்றதும், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.