/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை
/
சுருட்டப்பள்ளியில் ஏகதின வில்வ லட்சார்ச்சனை
ADDED : டிச 10, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை அருகே, சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில் அன்னை பார்வதி தேவி மடியில் தலைவைத்து படுத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இங்கு, மூலவர் வால்மிகீஸ்வர சுவாமிக்கு உலக நன்மைக்காக நேற்று காலை, ஏகதின வில்வ லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது.
காலை 7:00 மணி முதல் மதியம் 2:00 மற்றும் மாலை 3:00 முதல் 5:00 மணி வரை லட்சார்ச்சனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.